இவர் தான் அஜித்திற்கு தங்கையாக நடிக்கிறாரா?

358

என்னை அறிந்தால் வெற்றிக்கு பிறகு அஜித், சிவா இயக்கத்தில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.

இதில் அஜித்திற்கு ஒரு தங்கச்சியும் உள்ளதாம். இதற்காக பிரபல நடிகைகள் பலரிடம் கேட்க, அனைவரும் ஜோடி என்றால் ஓகே, தங்கச்சியாக தான் நடிக்க முடியாது என்று கூறி விட்டனர்.

இந்நிலையில் பிந்து மாதவியிடம் கேட்க, அவருக்கும் இஷ்டம் இல்லையாம், ஆனால், அஜித்துடன் நடிக்க வேண்டும் என்பது தன் கனவு என்பதால், அவர் சம்மதித்து விட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

SHARE