ஈராக்கில் தற்கொலைப்படை தாக்குதல்: 33 பேர் சாவு

384
ஈராக் தலைநகர் பாக்தாத் அருகில் இன்று தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 33 பேர் கொல்லப்பட்டனர்.

பாக்தாத்தின் தெற்கில் சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள மதீன் பகுதியில், அரசுக்கு ஆதரவான போராளிக் குழுவினர் சம்பளம் வாங்குவதற்காக இன்று வரிசையில் காத்திருந்தனர். அப்போது, அங்கு ராணுவ உடையில் வந்த தற்கொலைப்படை தீவிரவாதி தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை திடீரென வெடிக்கச் செய்தான்.

இதில், 33 பேர் இறந்தனர். இவர்களில் 3 பேர் ராணுவ வீரர்கள். 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது

SHARE