ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு: 44 பேர் பலி

470
ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 44 பேர் பலியானதாக கூறப்படுகிறது. அங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று போலீசார் கொல்லப்பட்டுள்ளனர்.

ஷியா பிரிவு முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் மட்டும் அத்தாக்குதல்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அந்நாட்டை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறி உள்ள நிலையில் தீவிரவாதிகளின் கை சற்று உயர்ந்துள்ளது. அந்நாட்டின் வடக்கு பகுதியில் நடைபெற்ற சண்டையில் 21 போலீஸ் அதிகாரிகளும், 38 தீவிரவாதிகளும் பலியானதாக கூறப்படுகிறது. வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட பையா பகுதியில் வெடித்த குண்டு காரணமாக 9 பேர் கொல்லப்பட்டதுடன் 22 பேர் காயமடைந்தனர்.

இது தவிர மேலும் ஏழு இடங்களிலும் நடைபெற்ற தொடர் தாக்குதலில் 35 பொதுமக்களும், 62 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த தாக்குதல்கள் அனைத்தும் ஒரு மணி நேர இடைவெளியில் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மருத்துவமனையில் எவ்வளவு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற விவரங்களை செய்தியாளர்களிடம் தெரிவிக்க மருத்துவர்கள் மறுத்துவிட்டன்ர்.

கடந்த ஆண்டு மட்டும் ஈராக்கில் நடைபெற்ற வன்முறையில் 8868 பேர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE