ஈராக்கில் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது போராளிகள் தாக்குதல்

439
ஈராக்கில் சன்னி இனத்தை சார்ந்த கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி அங்குள்ள நகரங்களை கைப்பற்றி வருகின்றனர். கடந்த வாரம் சதாம் உசேனின் சொந்த நகரான திக்ரித்தை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் அடுத்து மொசூல் நகரை கைப்பற்றினர்.

நேற்று அவர்கள் மேலும் முன்னேறி தல் அஃபாரை கைப்பற்றினர். தலைநகர் பாக்தாத்தை கைப்பற்றும் முடிவில் அவர்கள் மேலும் முன்னேறி வரும் கிளர்ச்சியாளர்களுடன் ஈராக் ராணுவம் கடுமையாக சண்டையிட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலையில் சலாஹிதீன் மாகாணம் பாய்ஜி நகரில் உள்ள முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை கிளர்ச்சியாளர்கள் தகர்த்தனர். இதன் காரணமாக எண்ணெய் நிரப்பப்பட்டிருந்த சில டேங்கர் லாரிகள் தீப்பிடித்து எரிந்தன.

இதையடுத்து கிளர்ச்சியாளர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. கிளர்ச்சியாளர்கள் முன்னேறி வரும்போதே எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஊழியர்கள் நேற்றுவெளியேற்றப்பட்டு அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

SHARE