ஈரான் ஜனாதிபதியின் விமானத்தால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பம்

78

 

இப்ராஹிம் ரய்சி நாடு திரும்பவிருந்த விமானம் 30 நிமிடங்கள் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இவ்வாறு விமானம் புறப்படவிருந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக சர்வதேச பயணிகள் விமானஙகள் சிலவற்றின் பயணங்கள் காலம் தாழ்த்தப்பட்டுள்ளன.

ஶ்ரீலங்கா விமான சேவை
சிங்கப்பூர் விமான சேவை நிறுவனம், ஶ்ரீலங்கா விமான சேவை நிறுவனம் மற்றும் தாய் விமான சேவை நிறுவனம் என்பனவற்றுக்கு சொந்தமான விமானங்களின் பயணங்களே இவ்வாறு காலம் தாழ்த்தப்பட்டுள்ளன.

ஈரான் ஜனாதிபதி பயணம் செய்த விமானம் விமான ஓடு தளத்தில் தாமதித்த காரணத்தினால் ஏனைய விமானங்களின் பயணங்களும் காலம் தாழ்த்தப்பட்டதாக விமான நிலைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு காரணங்களுக்கான ஈரான் ஜனாதிபதி பயணம் செய்த விமானத்தின் பயணம் சுமார் 30 நிமிடங்கள் வரையில் காலம் தாழ்த்தப்பட்டுள்ளது.

ஈரான் ஜனாதிபதி
இஸ்ரேல் அரசாங்கத்திற்கு சொந்தமான அர்கியா விமான சேவை நிறுவனத்தின் விமானமொன்று கட்டுநாயக்க விமான நிலயத்திலிருந்து பயணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை விமானப் படைக்கு சொந்தமான விமானமொன்று வானில் பறக்கச் செய்யப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் ஈரான் ஜனாதிபதியின் விமானம் பயணத்தை தொடர்ந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

SHARE