ஈழத்தமிழர்களும் சர்வதேச தொழிலாளர் தினம்;

584

gemany_may_day_20146ஆண்டுதோறும் மே மாதம் முதலாம் திகதி உலகமெங்கும் உழைக்கும் வர்க்கத்தின், தொழிலாளர்களின் தினமாக கொண்டாடப்படுகின்றது. இன, மத, மொழி, நாடு என்ற யாதொரு வேறுபாடுமின்றி உழைக்கும் வர்க்கத்தின் ஒன்றுபட்ட சக்தியை, ஒற்றுமையைப் பறைசாற்றும் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

அந்தவகையில் யேர்மன்வாழ் புலம்பெயர் ஈழத்தமிழர்களும் சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வை  வெளிநாட்டவர்களின் நிகழ்வுடன் இணைந்து நேற்று வியாழக்கிழமை யேர்மனியில்  பல நகரங்களில் (Berlin, Bremen, Hamburg, Stuttgart, Düsseldorf,Göttingen, Saarbrücken, Frankfurt )மிகவும் சிறப்பாக நடாத்தினார்கள்.

பல்வேறுபட்ட இனங்களினதும் கட்சிகளினதும் ஒன்றிணைந்த அணிவகுப்புக்கு மத்தியில் தமிழ் மக்களின் பேரணியும் இடம்பெற்றது.அவற்றின் மத்தியில் ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் இன அழிப்பை பல்லின மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் பதாதைகளைத் தாங்கியநிலையில்  எமது மக்களும் அணிவகுத்துச் சென்றனர்.பேரணியைப் பார்வையிட்ட வெளிநாட்டு மக்களுக்கு தமிழ் மக்களின் போராட்டம் பற்றிய யேர்மன் மொழித் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன.SHARE