உக்ரைனில் 3,500க்கும் அதிகமான அப்பாவி மக்கள் உயிரிழப்பு!

77

 

உக்ரைன் மீது ரஷ்யா இரண்டு மாதங்களுக்கும் மேலாக போரை தொடுத்து வருகின்றது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது.

மேலும் உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சி செய்து வரும் நிலையில் இதுவரைவில் போரை முடிவுக்கு கொண்டு வரவில்லை.

இந்த நிலையில், உக்ரைன் மீது ரஷிய படைகள் தாக்குதலை தொடங்கியது முதல் இதுவரை அந்நாட்டில் 3,573 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும், 3,816 பொதுமக்கள் காயம் அடைந்ததாகவும் ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

கனரக பீரங்கிகள், வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் மூலம் பெரும்பாலான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா.சபை குறிப்பிட்டுள்ளது.

SHARE