உங்கள் இறப்பு பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமா? இந்த கேள்விகளுக்கு பதிலளியுங்கள்

319
சுவீடன் நாட்டு விஞ்ஞானிகள்,நீங்கள் 5 வருடங்களில் இறந்துவிடுவீர்களா? என்பதை அறிந்து கொள்வதற்காக கேள்வி பதில் வடிவிலான ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர்.சுவீடனை சேர்ந்த விஞ்ஞானிகள் நீங்கள் 5 வருடங்களில் இறந்துவிடுவீர்களா என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமா? அப்படியென்றால் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளியுங்கள் என்று சில கேள்விகளை நம்மிடம் கேட்கிறார்கள்.

அதாவது, விஞ்ஞானிகள் உருவாக்கிய சமூக வளைதளத்தில் ஆண்களுக்கு 11 கேள்விகளும், பெண்களுக்கு 13 கேள்விகளும் கேட்கப்படுகின்றன.

புகை பிடிக்கும் பழக்கம், உடல்நலக்கோளாறு, நடக்கும் வேகம், எத்தனை கார் வைத்துள்ளீர்கள் போன்ற கேள்விகள் இடம் பெற்றுள்ளன.

இது தொடர்பாக ஸ்கொட்லாந்து நாட்டின் இரு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 35 ஆயிரம் நோயாளிகளிடம் இந்த வலைதள விஞ்ஞானிகள் முதலில் சோதனை நடத்தினர்.

அதில் கிடைத்த முடிவுகள் 80 சதவீதம் மருத்துவர்களின் கணிப்புகளுடன் துல்லியமாக பொருந்தின. இந்த வலைதளத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம் ஆய்வகங்கள் மற்றும் மருத்துவ பரிசோதனை கூடங்களுக்கு செல்லாமலேயே தங்கள் வாழ்க்கையில் ஏற்பட உள்ள அபாயங்களை தெரிந்து கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் உறுதிபட கூறியுள்ளனர்.

இதில் கலந்து கொள்ள உங்கள் வயது 40 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் இறப்பு பற்றி தெரிந்து கொள்ள www.ubble.co.uk என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

SHARE