உங்கள் Smartphoneல் இதில் எதாவது ஒரு பிரச்சனை இருக்கா? உடனே இப்படி செய்யுங்கள்

344

 

ஸ்மார்ட்போன்களில் பொதுவாக காணப்படும் பிரச்சனைகள் என சில உள்ளன.

அதன்படி கீழே கூறப்பட்ட பிரச்சனைகளில் சில உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தால் அது சரியாகவும், நலமாகவும் இல்லை என அர்த்தம் கொள்ளலாம்.

போன் ப்ரீஸ் ஆவது

ஸ்மார்ட்போன்களில் ஃப்ரீஸிங் பிரச்சனையை பலரும் சந்திக்கின்றனர். ஒவ்வொருமுறையும், தங்கள் போன் ஃப்ரீஸ் ஆகும் போது, ரீஸ்டார்ட் செய்வது மட்டுமே பலரும் செய்யும் விடயம்.

தீர்வு?

நீங்கள் பயன்படுத்தாத அல்லது பயன்படுத்த விரும்பாத ஆப்கள், தேவை இல்லாத புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை டெலிட் செய்து விடவும். இதன் மூலம் உங்கள் மொபைல் ஸ்டோரேஜின் மீதான சுமையை குறைக்கலாம்.

உங்கள் Smartphoneல் இதில் எதாவது ஒரு பிரச்சனை இருக்கா? உடனே இப்படி செய்யுங்கள் | Smartphone Common Problems Tamil Technology

Getty Images

மெதுவான செயல்பாடு

ஸ்லோ பெர்ஃபார்மென்ஸ் பிரச்சனையும் பலரின் செல்போனில் உள்ளது.

தீர்வு

மொபைல் ஸ்டோரேஜை திறம்பட நிர்வகிக்கவும். ஒவ்வொரு சில நாட்களுக்கும் உங்கள் மொபைலை ரீஸ்டார்ட் செய்யவும். தேவைக்கு மீறி, ஏராளமான ஆப்களை இன்ஸ்டால் செய்வதை தவிர்க்கவும்.

பேட்டரி

பேட்டரிகள் வீக்கம் அல்லது பேட்டரி செயலிழப்பு போன்ற சம்பவங்கள் மிகவும் அரிதான நிகழ்வுகள் ஆகும். ஆனால் மிகவும் பொதுவான பிரச்சனை என்னவென்றால், அது – விரைவாக தீரும் பேட்டரி லைஃப் தான்!

தீர்வு

இன்டர்நெட்டை பயன்படுத்தாதபோது, மொபைல் டேட்டாவை ஆஃப் செய்து வைக்கவும். தேவை இல்லாத நேரங்களில் ஸ்க்ரீன் ப்ரைட்னஸை குறைக்கவும்.

SHARE