உடல் சூட்டை தணிக்கும் கோவைக்காய்

255
மருத்துவ செய்தி
கோவைக்காயின் தண்டு, கனிகள், இலைகள், வேர் என அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.கோவைக்காயின் பழங்கள் சிவப்பு நிறமுடையவை, இவற்றை உண்டால் நாக்கில் உள்ள புண்கள் ஆறும்.

வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை உண்ணலாம்.

கோவை இலையானது இருமல், வாதநோய், சிரங்கு, உடல் சூடு, நீரடைப்பு போன்றவற்றை நீக்கும்.

கோவை இலையை கொதிக்கின்ற வெந்நீரில் போட்டு பதினைந்து நிமிடம் கழித்து வடிகட்டி கொடுக்க உடல்சூடு, சொறி சிரங்கு, நீரடைப்பு, இருமல் நீங்கும்.

இலையை காயவைத்து பொடி செய்து, மருந்தாக கொடுத்தாலும் இந்த நோய்கள் நீங்கும்.

கோவை இலையை எண்ணெயில் கொதிக்க வைத்து படை, சொறி, சிரங்கு போன்றவைக்கு பூசலாம் சருமநோய்கள் குணமாகும்.

பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.

கடிகளால் ஏற்பட்ட காயங்களின் மீது கோவை இலையை அரைத்து வைத்துக் கட்டினால் புண் விரைவில் ஆறும். மேலும் தோல்நோய்களை குணப்படுத்த உதவும்.

கோவைக்காய் பித்தம், ரத்தப் பெருக்கு, வாயு, வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றுக்கெல்லாம் நல்ல மருந்தாகும்.

கோவை இலைச் சாறு, பித்தம், மூல நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படும்.

SHARE