உயர்கல்வி அமைச்சர் சந்திச் சண்டியரை போல் முழங்காலுக்கு மேல் சாரத்தை தூக்கி கொண்டு சத்தம் போடுவதாக அனைத்து பல்லைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

442
உயர்கல்வி அமைச்சர் சந்திச் சண்டியரை போல் முழங்காலுக்கு மேல் சாரத்தை தூக்கி கொண்டு சத்தம் போடுவதாக அனைத்து பல்லைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க அச்சுறுத்தினாலும் ருகுணு பல்கலைக்கழத்தில் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை நடத்த இடமளிக்க போவதில்லை என ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரான மருத்துவப்பீட மாணவர் நஜீத் இந்திக தெரிவித்தார்.

தேசத்திற்கு மகுடம் என்றபது அரசாங்கத்தின் தோற்றத்தை பெருக பண்ணும் திட்டம் மாத்திரமே. அதனை பல்கலைக்கழகத்திற்குள் நடத்த நாங்கள் இடமளிக்க மாட்டோம்.

மகாபொல புலமைப் பரிசிலை அதிகரிக்கவும் மாணவர்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் அரசாங்கத்திடம் பணம் இல்லையாம். ஆனால் 100 கோடி ரூபா பணத்தை செலவிட்டு தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை நடத்த அரசாங்கத்திடம் பணம் இருக்கிறது.

அமைச்சர் என்ன கதை கூறுகிறார்?. அவர் எப்படி அதனை செய்ய முடியும்?. இந்த கதையின் அர்த்தம் என்ன?.

சந்தியில் இருக்கும் சண்டியர் போல் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க நடந்து கொள்கிறார்.

முன்னர், சண்டியர்கள் சாரத்தை தூக்கி பிடித்தவாறே சத்தமிடுவர். எமது ஏனைய பிரச்சினைகளுக்கும் இவ்வாறு அச்சமின்றி பதிலளிக்குமாறே நாங்கள் கேட்கின்றோம் எனவும் நஜீத் இந்திக குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE