உலகக்கோப்பை ஆக்கி: தென்கொரியாவை வீழ்த்தி இந்தியா 9-வது இடம்

454
உலகக்கோப்பை ஆக்கி போட்டி தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் மோசமான ஆட்டத்தால் முதல் 4 இடங்களில் இந்தியா வர இயலவில்லை. இந்நிலையில் 9-வது இடத்திற்கான போட்டியில் இந்தியா- தென்கொரியா அணிகள் இன்று மோதின.

இதில் இந்தியா 3-0 என்ற கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி 9-வது இடத்தை பெற்றது. இந்திய வீரர் ஆகாஷ்தீப் சிங் 6 மற்றும் 50 நிமிடங்களில் இரண்டு கோல் அடித்தார். ருபிந்தர் சிங் 43-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அதன்பின் தென்கொரியா அணியில் கோல் ஏதும் அடிக்க இயலவில்லை. இதனால் இந்தியா 3-0 என்ற கணக்கில் வென்றது.

இந்தியாவிற்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு 3 முறை கிடைத்தது. ஆனால் அதில் ஏதும் கோலாக மாறவில்லை. ஒரு பெனால்டி ஸ்ட்ரோக் கிடைத்தது. அதை கோலாக மாற்றியது.

தென்கொரியாவிற்கு 2 பெனால்டி கார்னர் கிடைத்தது. அதில் கோல் ஏதும் கிடைக்கவில்லை. இந்திய வீரர் குர்பால் சிங்க்கு மஞ்சள் அட்டையும், தென்கொரியாவைச் சேர்ந்த லீக்கு பச்சை அட்டையும் நடுவரால் வழங்கப்பட்டது.

SHARE