உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தங்க நுழைவுச் சீட்டு விநியோகம் ஆரம்பம்

24

 

2023 ஆம் ஆண்டின் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஒக்டோபர் 5 ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளது.

இம்முறை உலகக் கிண்ண கிரிக்கெட்டிற்கு தங்க நுழைவுச்சீட்டு என்ற ஒரு திட்டத்தை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள பிரபலங்களுக்கு இந்த தங்க நுழைவுச் சீட்டுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சச்சின் டெண்டுல்கர்
இதன் மூலம் அவர்கள் இந்தியாவில் நடைபெறும் அனைத்து போட்டிகளையும் விஐபி அந்தஸ்தில் அமர்ந்து பார்க்க முடியும், இதற்காக அவர்கள் எந்த பணத்தையும் செலவிடத் தேவையில்லை.

இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்துள்ள பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, பொலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு முதல் தங்க நுழைவுச்சீட்டை வழங்கினார்.

இதேவேளை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கும் இந்த தங்க நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு கிரிக்கெட் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஒரு நுழைவுச் சீட்டுக்காக ரசிகர்கள் அலையும்போது பிரபலங்களுக்கு இவ்வாறு இலவச நுழைவுச் சீட்டுகள் தேவைதானா என்று அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE