உலகளவில் பட்டையை கிளப்பிய ஜவான்.. இதுவரை எவ்வளவு வசூலா

6

 

ஜவான் படம் ஒவ்வொரு நாளும் வசூலில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துகொண்டே இருக்கிறது. ரூ. 1000 கோடியை கண்டிப்பாக ஜவான் படம் வசூல் செய்யும் என்று தான் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு மிகவும் அருகில் இப்படம் சென்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அட்லீ – ஷாருக்கான் கூட்டணியில் வெளிவந்த ஜவான் முதல் நாளே உலகளவில் ரூ. 129 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தது.

வசூல் விவரம்
அதிலிருந்து 5 நாட்கள் வசூலில் உச்சத்தை தொட்ட ஜவான் அதன்பின் சற்று குறைய துவங்கியது. ஆனால், கடந்த வார இறுதியில் ஜவான் படத்தின் வசூல் மீண்டும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 830 கோடி [100 மில்லியன்] வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் கண்டிப்பாக ஜவான் படம் ரூ. 1000 கோடியை கடந்த விடம் என்கின்றனர்.

SHARE