உலகின் முதல் டிஸ்ப்ளே இல்லாத AI Pin ஸ்மார்ட்போன்: சிறப்பம்சங்கள் என்னென்ன?

144

 

உலகின் முதல் டிஸ்ப்ளே இல்லாத ஸ்மார்ட்போனை ஹியூமேன் மென்பொருள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகின் முதல் டிஸ்ப்ளே இல்லாத ஸ்மார்ட்போன்
செயற்கை நுண்ணறிவு யுகத்தில் டிஸ்பிளே(Display) இல்லாத உலகின் முதல் ஸ்மார்ட்போனை ஹியூமேன்(Humane) என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

Humane நிறுவனம் மென்பொருள் மற்றும் நுண்பொருள்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. AI Pin என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் கம்ப்யூட்டர் மற்றும் பேட்டரி பூஸ்டர் என இரு பாகங்களை கொண்டுள்ளது. டிஸ்ப்ளே இல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், ஆடையில் அணிந்து கொண்டு உபயோகிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கொடுக்கப்பட்டுள்ள ப்ரோஜக்டரை பயன்படுத்தி உங்கள் உள்ளங்கையில் தரவுகளை காணும் வகையில் AI Pin ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்
AI Pin ஸ்மார்ட்போன் மொழிப்பெயர்பாளரை போல் செயல்பட்டு, எதிரில் இருப்பவர் நமக்கு தெரியாத மொழியில் பேசினால் கூட, நாம் பேசுவதை மொழிபெயர்த்து கூறும் வசதிகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாம் கூறுவதை புரிந்து கொண்டு குறுஞ்செய்தி அனுப்புவது, கால் செய்வது, புகைப்படம் எடுப்பது ஆகியவற்றை செயல்படுத்தும் வசதி உள்ளது.

மேலும் நாம் உட்கொள்ளும் உணவு பொருட்களை ஸ்கேன் செய்து அதில் உள்ள கொழுப்பு, புரதம் ஆகிய ஊட்டச்சத்துகளின் அளவை துல்லியமாக தெரிவிக்கும் வசதி இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த AI Pin ஸ்மார்ட்போனில் 13 மெகா பிக்சல்ஸ் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE