உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியலில் டோனி

167
உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் 100 பேர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் 38 இசைக் கலைஞர்கள், 29 விளையாட்டு வீரர்கள், 19 நடிகர்கள், 6 பிரமுகர்கள், 3 வானொலி நட்சத்திரங்கள், 2 நகைச்சுவை நடிகர்கள், 1 சமையல் கலைஞர், 1 எழுத்தாளர் மற்றும் மாடல் ஆகியோர் இடம்பிடித்து உள்ளனர்.

இதில் அமெரிக்கக் குத்துச்சண்டை வீரர் பிலாய்ட் மேவெதர் முதலிடம் பிடித்துள்ளார், இவரின் ஆண்டு வருமானம் 300 மில்லியன் டொலர்கள்.

இவருக்கு அடுத்த இடத்தை இவரின் சக குத்துச்சண்டை வீரர் மெனி பாக்குவோ 160 மில்லியன் டாலர்களுடன் பிடித்துள்ளார்.

முதல்முறையாக போர்ப்ஸ் பத்திரிக்கை இந்த வருடம் நடிகர்களையும் இந்தப் பட்டியலில் இணைத்துள்ளது.

அதன்படி பிரபல பாலிவுட் பிரபலங்களான அமிதாப் பச்சன், சல்மான் கான், அக்சய் குமார் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் ஹாலிவுட் பிரபலங்களையே ஓரங்கட்டிவிட்டனர்.

அமிதாப் பச்சன், சல்மான் கான் 33.5 மில்லியன் டொலர்களுடன் 71வது இடத்தில் இருக்கின்றனர். அக்சய் குமார் 32.5 மில்லியன் டொலர்களுடன் 76வது இடத்தில் உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் டோனிக்கு 82வது இடம் கிடைத்துள்ளது. இவரின் ஆண்டு வருமானம் 31 மில்லியன் டொலர்களாகும்.

SHARE