உலகிலேயே மிகச்சிறிய பறக்கும் கமெரா!

912
ஆக்சிஸ் விடியஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ள உலகிலேயே மிகச்சிறிய பறக்கும் கமெரா விற்பனைக்கு வரவுள்ளது.100 அடி உயரம் வரை பறக்கும் இந்த கமெரா, 1.5 இன்ச் அளவுக்கும் குறைவான குவாட்காப்டர் விமானத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், 360 டிகிரியில் சுழல்வதோடு மட்டுமல்லாமல், அதிகபட்சமாக 420  Pixels வரை படங்களை ஓரளவுக்கு தெளிவாக படம் பிடிக்கிறது.

வீடியோ மட்டுமில்லாது , புகைப்படங்களையும் எளிதாக எடுக்க முடியும். ஆனால், இதில் 150 MAH அளவே Battery இருப்பதால் 20 நிமிடங்களுக்கு சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 5-7 நிமிடங்கள் வரை மட்டுமே இந்த கமெராவால் வானில் பறக்க முடியும்.

Flight Sensitivity – ஐ பொறுத்து 3 அளவுகளில் பறக்கும் வேகத்தை நாம் கட்டுப்படுத்தலாம். இதில் உள்ள 6 Axis Siro Stabilization தொழில்நுட்பம், குட்டி கமெராவை சுமந்து செல்லும் மிகச்சிறிய விமானத்தை காற்றின், வேகத்தால் ஸ்தம்பித்து விடாமல் நிலையாக பறக்க உதவி செய்கிறது.

இரவு நேரங்களில் பறக்க விடும் போது நாம் எளிதாக இந்த குட்டி கமெராவை கண்காணிக்கும் வகையில் கலர் கலரான Led பல்புகளும் உள்ளன.

இந்த குட்டி கமெரா விமானத்தின் எடை 0.55 பவுண்டுகளாகும். தற்போது இது 95 டொலருக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

SHARE