உலக கோப்பை இறுதிப் போட்டி: பாலஸ்தீன கொடியுடன் விராட் கோலியை பிடிக்க முயன்ற இளைஞர்

84

 

பாலஸ்தீனம் தொடர்பான டி-சர்ட் அணிந்த இளைஞர் ஒருவர் அத்துமீறி மைதானத்திற்குள் நுழைந்து விராட் கோலியை கட்டி பிடிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இறுதிப் போட்டி
குஜராத்தின் அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றனர்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனால் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க வீரர் ஷுப்மன் கில் 4 ஓட்டங்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்து அதிர்ச்சி அளித்தார்.

அவரை தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் ரோஹித் சர்மா 31 பந்துகளில் 47 ஓட்டங்கள் குவித்து இருந்த போது மேக்ஸ்வெல் பந்தில் அவுட்டானார்.

மைதானத்திற்குள் நுழைந்த இளைஞர்
இந்தியா அவுஸ்திரேலியா இடையே விறுவிறுப்பாக உலக கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்று வரும் நிலையில், பாலஸ்தீனம் தொடர்பான டி-சர்ட் அணிந்த இளைஞர் ஒருவர் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்தார்.

பாலஸ்தீனத்தின் கொடியில் முகமூடி அணிந்து இருந்த இளைஞரின் டி-சர்ட்டில் ஃப்ரீ பாலஸ்தீன என எழுதப்பட்டு இருந்தது.

அத்துடன் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை கட்டி பிடிக்க முயன்றதால் சற்று நேரம் மைதானத்திற்குள் பரபரப்பு ஏற்பட்டது.

SHARE