உலக கோப்பை ஜூனியர் கால்பந்து: போர்ச்சுகல் ஹாட்ரிக் வெற்றி

332
24 அணிகள் இடையிலான 20-வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி (20 வயதுக்குட்பட்டோர்) நியூசிலாந்தில் நடந்து வருகிறது.

இதில் ‘சி’ பிரிவில் நடந்த லீக் ஆட்டங்களில் செனகல் 2-1 என்ற கோல் கணக்கில் கத்தாரையும், போர்ச்சுகல் 3-1 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவையும் தோற்கடித்தது. போர்ச்சுகல் தொடர்ச்சியாக பெற்ற 3-வது (ஹாட்ரிக்) வெற்றி இதுவாகும். இந்த பிரிவில் முதல் இரு இடங்களை பிடித்த போர்ச்சுகல் (9 புள்ளி), கொலம்பியா (4 புள்ளி) 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) முன்னேறின.

‘டி’ பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் செர்பியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வென்றது. மாலி-உருகுவே அணிகள் இடையிலான ஆட்டம் டிரா (1-1) ஆனது. ‘டி’ பிரிவில் செர்பியா அணி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று முதலிடத்துடனும், உருகுவே அணி ஒரு வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 2-வது இடத்துடனும், மாலி அணி ஒரு வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 3-வது இடத்துடனும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றன. மெக்சிகோ (3 புள்ளி) வெளியேற்றப்பட்டது.

இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் ஹங்கேரி-நைஜீரியா, பிரேசில்-வடகொரியா (இ பிரிவு), ஹோண்டுராஸ்-ஜெர்மனி, பிஜி-உஸ்பெகிஸ்தான் (எப் பிரிவு) அணிகள் மோதுகின்றன

SHARE