உலக சாதனை படைத்த இந்திய வீராங்கனை

111

அஜர்பைஜான் நாட்டின் பகு நகரில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில், நேற்று நடந்த இளநிலை மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவுக்கான போட்டியில், இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ரிதம் சங்வான் (19), கலந்துகொண்டார்.

இந்தப் போட்டியில், அவர் தகுதிச்சுற்றில் 595 புள்ளிகள் சேர்த்தார். கடந்த 1994-ம் ஆண்டு பல்கேரிய வீராங்கனை டயானா லார்கோவா 594 புள்ளிகள் சேர்த்து இருந்ததே இதுவரை உலக சாதனையாக இருந்து வந்தது.

அதனை சங்வான் முறியடித்துள்ளார். இதற்கு முன் 1989-ம் ஆண்டு ரஷிய வீராங்கனை நினோ சலுக்வத்ஜேவின் (593 புள்ளிகள்) சாதனையையும் முறியடித்துள்ளார்.

maalaimalar

SHARE