உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் தவறாக இசைக்கப்பட்ட ஸ்பெயின் தேசிய கீதம்

189
உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி இந்தோனேசியாவில் உள்ள ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது. 9 ஆயிரம் ரசிகர்களால் நிரம்பியிருந்த இஸ்டோரா செனாயன் மைதானத்தில் இந்தியாவின் சாய்னா நேவால், ஸ்பெயின் நாட்டின் கரோலினா மரின் பலப்பரீட்சை நடத்தினாரகள்.

இதில் கரோலினா வெற்றி பெற்று தங்கம் பதக்கம் வென்றார். அவர்களுக்கு பரிசு அளிக்கும்போது அந்தந்த நாட்டின் தேசியகீதம் இசைக்கப்படும். இன்று கரோலினாவிற்கு பதக்கம் வழங்கும்போது தவறுதலாக ஸ்பெயின் நாட்டின் பழைய தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதற்கு உலக பேட்மிண்டன் பெடரேசன் மன்னிப்பு கேட்டுள்ளது.

இதுகுறித்து உலக பேட்மிண்டன் பெடரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘கரோலினா மரினிடம் ஸ்பெயின் நாட்டின் பழைய தேசிய கீதத்தை தவறுதலான இசைத்தமைக்கு உலக பேட்மிண்டன் பெடரேசன் மற்றும் போட்டியை நடத்தும் உள்ளூர் சார்பாக மன்னிப்பு கோருகிறோம்’’ என்று குறிப்பிட்டுள்ளது.

இது கரோலினாவின் தொடச்சியான 2-வது உலக சாம்பியன்ஷிப் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது

SHARE