உலக நாடுகளின் பார்வையில் தளபதி கருணா அம்மான் – தன்னிச்சையாக செயற்பட அனுமதித்தால் இலங்கையரசிற்கு ஆபத்து.

378

தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாற்றில் இரண்டு தசாப்த காலங்களாக சிங்கள அரசிற்கு தலையிடி கொடுத்து வந்தவர் கருணா அம்மான். இவருடைய வலிந்த தாக்குதல் காரணமாக இலங்கைப் படையினர் ஓட்டம் பிடித்ததை யாவரும் அறிந்ததே. ஜெயசிக்குறு சமர் என்பது சாதாரண சண்டையல்ல. அமெரிக்க அரசினால் திட்டமிடப்பட்டு, தரைவழிப்பாதையை திறக்கும் ஒருயுத்தமாகவே திட்டங்கள் வகுக்கப்பட்டது. அத்திட்டத்தினை முறியடித்த பெருமை கருணாவையும், அவரது அணியினரையுமே சாரும். இது இவ்வாறிருக்க கெப்திக்கொல்லாவ, தலதாமாளிகை, கொலன்னாவ, ஒப்பரேசன் தவளை, ஆகாயக்கடல்வழி, புளுக்கன்னாவ போன்ற தாக்குதல்களில் சிறப்பு விருதுகளும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் அவருக்கு வழங்கப்பட்டது.

தற்பொழுதும் கூட இன்னுமொரு நாட்டின் உதவியுடன் ஆயுதங்கள் கருணாவின் கைகளுக்கு செல்லுமாகவிருந்தால், மீண்டுமொரு வலிந்த தாக்குதலை இலங்கை அரசிற்கு எதிராக தொடுப்பதற்கு அவர் தயக்கம் காட்டமாட்டார். மைத்திரிபால சிறிசேன அரசு அவரை ஓரங்கட்டுமாகவிருந்தால் அடுத்தகட்ட திட்டங்களை வகுத்து, இவ்வரசினை கவிழ்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்றே ஆய்வாளர்களால் கருதப்படுகின்றது. ஏற்கனவே இவர் விடுதலைப்புலிகளுடன் இருந்தகாலத்தில் பல்வேறு நாட்டின் இராணுவத்தளபதிகளுடன் தொடர்புகளை மேற்கொண்டிருந்தார். காரணம் இவரின் தாக்குதல் தலைமைத்துவம் சிறப்பானதாக காணப்பட்டமையாலேயாகும்.

எவரது பேச்சினையும் நம்பாத விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், கருணாவினது பேச்சினை அதிகமாக கேட்பது வழக்கம். ஆனால் இறுதிநேரத்தில் அவர் தமிழீழத்திற்கும், போராட்டத்திற்கும் இழைத்த துரோகம், காட்டிக்கொடுத்ததன் விளைவையே இன்று தமிழ் இனம் அனுபவிக்கின்றது. வெறுமனே தமிழ்த்தேசியம், சுயநிர்ணயம் என்று பேசுபவர்கள் ஆயுதபலம் இன்று பேசுவது சிறந்ததொன்றல்ல. ஆகவே அஹிம்சை வழியிலான போராட்டங்களை முன்னெடுப்பதே சிறந்தது. இவருடன் பார்க்கின்றபொழுது கே.பி அவர்களும் ஆயுதக்கடத்தல்களில் உலகளாவிய ரீதியில் தலைசிறந்தவர். 45 நாடுகளில் இவரது ஆயுத வர்த்தகம் இருந்துவந்தது. ஏனைய போராளிகளுடன் ஒப்பிடும்பொழுது கருணா, கே.பி இருவரும் போராட்ட வரலாற்றில் தலைசிறந்தவர்களாகவே கருதப்படுகின்றனர். ஒன்றில் இவர்களை சிறையில் அடைக்கவேண்டும். இல்லையேல் இவர்களை சுயாதீனமாக செயற்பட அனுமதித்தால் அரசிற்கு ஆபத்தான விளைவுகளே ஏற்படும்.

ஜனநாயக வழியில் செயற்படுகின்றோம் எனக்கூறிவரும் கருணா அம்மான், பல்வேறு போர்க்களங்களைக் கண்டுவந்ததே வரலாறு. அமெரிக்கா, பிரிட்டன் அல்லது தீவிரவாதிகளாக செயற்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் இவர்களை உள்வாங்கிக்கொள்ளும் நிலையும் இருக்கின்றது. இலங்கையில் கருணாவிற்கு பாதுகாப்பு வழங்கப்படாவிட்டாலோ அல்லது அவரை அரசியலில் இருந்து ஓரங்கட்டிவிட்டாலோ ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இவரை உள்வாங்கிக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. எவ்வாறு மைத்திரியின் அரசு செயற்படப்போகிறார்கள் என்பது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் ஒரு போராட்டத்தினை ஆரம்பித்து அரசியலை வேறுவிதமாக திசைதிருப்புவார்களோ என்கின்ற சந்தேகங்களும் நிலவிவருகின்றது. ஆகவே கருணா, பிள்ளையான், கேபி போன்றவர்களுக்கு உடனடியாக நடவடிக்கையினை மேற்கொள்வதன் மூலமே இந்த அரசினை தக்கவைத்துக்கொள்ளமுடியும். இல்லையேல் இந்த அரசிற்கு ஆபத்து.

_39937843_leader   ltte.piraba-karu-300x199

SHARE