சானியா மிர்சாவின் வெற்றிகள் தனக்கு ஊக்கம் அளிப்பதாக அவரது கணவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயிப் மாலிக் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, மார்டினா ஹிங்கிசுடன் (சுவிட்சர்லாந்து) இணைந்து விம்பிள்டன் போட்டியில் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்று சாதனை புரிந்தார்.
மேலும் அமெரிக்க ஒபனிலும் இந்த ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
இந்நிலையில் சானியாவின் வெற்றிகள் கிரிக்கெட்டில் தனக்கு சாதிக்க ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது என்று அவரது கணவர் சோயிப் மாலிக் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் நன்றாக விளையாட வேண்டும் என்பதை நோக்கமாக வைத்துள்ளேன்.
சிலர் ஜிம்பாப்வே தொடர் கடினமாக இருக்காது என்று கருதுகிறார்கள். ஆனால் ஜிம்பாப்வே அணியை தோற்கடிப்பது கடினமானது” என்று தெரிவித்துள்ளார்