ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டுக்குழு சவால்

417
வடக்கு, தெற்கு ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு! முடிந்தால் குழப்புங்கள்: ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டுக்குழு சவால்
ஊடக கருத்தரங்குகள் நடத்தப்படுவதற்கு எதிராக அரசாங்கத்தின் வன்முறை குழுக்கள் முன்னெடுத்து வரும் கேவலமான மற்றும் கோழைத்தனமான நடவடிக்கைகளை எதிர்க்கும் வகையில் வடக்கு மற்றும் தெற்கு ஊடகவியலாளர்களுக்காக பயிற்சி கருத்தரங்கு நடத்தப்படும் என ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

முடிந்தால் அந்த பயிற்சி கருத்தரங்களை குழப்புமாறும் செயற்பாட்டுக்குழு சவால் விடுத்துள்ளது.

இலங்கை பத்திரிகை சபையின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த சவால் விடுக்கப்பட்டது.

இலங்கையின் இன்றைய அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் ஊடக சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து நாட்டில் உள்ள சகல வெளிநாட்டு தூதரங்களுக்கும் தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து கூறும் சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரத்திற்கும் பயங்கரமான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாகவும் எதிர்வரும் தேர்தல் காலங்களில் இந்த நிலைமை மேலும் மோசமடைய கூடும் எனவும் செயற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டாளரும் லக்பிம பத்திரிகையின் ஆசிரியருமான சமன் வகஆராச்சி தெரிவித்தார்.

tpn   news

SHARE