ஊர்காவற்றுறையை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான 20 வயது இளம்பெண்ணை காணவில்லையென ஊர்காவற்றுறை பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

331

 

நாரந்தனை வடக்கு ஊர்காவற்றுறையை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான 20 வயது இளம்பெண்ணை காணவில்லையென ஊர்காவற்றுறை பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிரோஜினி (20) என்பவரே காணாமல் போயுள்ளார். இவரது தாயார் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

கடந்த 11ம் திகதி இவர் வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். முல்லைத்தீவில் உள்ள தனது கணவரை பார்ப்பதற்காக செல்வதாக கூறி, இரண்டரை வயதான தனது குழந்தையை தாயாரிடம் ஒப்படைத்து விட்டு சென்றிருக்கிறார்.

ஆனால் அவர் முல்லைத்தீவிற்கும் வந்து சேரவில்லையென அவரது கணவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே தீவகத்தில் வித்தியா காணாமல் போய், பின்னர் சடலமாக மீட்கப்பட்ட கொந்தளிப்பு அடங்குவதற்கு முன்னர் மீண்டும் அந்த பகுதியில் இளம்பெண்ணொருவர் காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.KK

3,187 total views, 1,719 v

SHARE