ஊர்காவற்றுறை நாரந்தனை வடக்குப் பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து யுவதி ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது என்று ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

372

 

ஊர்காவற்றுறை நாரந்தனை வடக்குப் பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து யுவதி ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது என்று ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர். நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த உதயகுமார் விபூசனா (வயது- 19) என்ற யுவதியே சடலமாக மீட்கப்பட்டார். நேற்று காலை யாழ். நகரிலுள்ள கல்வி நிலையத்திற்குச் செல்வதாகக் கூறி வீட்டில் இருந்து புறப்பட்ட யுவதி, மாலை வரை வீடு திரும்பாததால் பெற்றோர் தேடுதல் நடத்தியதுடன், பொலிஸ் நிலையத்திலும் தெரியப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் வீட்டில் இருந்து 700 மீற்றர் தூரத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் சடலம் ஒன்று காணப்படுவதாகப் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டவேளை, அது காணாமற்போயிருந்த யுவதியுடையது என்று தெரியவந்தது. சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE