ஊழல் மோசடி குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்வது உட்பட அனைத்து சம்பவங்களும் அரசியல் பழிவாங்கல்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச

343

 

ஊழல் மோசடி குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்வது உட்பட அனைத்து சம்பவங்களும் அரசியல் பழிவாங்கல்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச

11183462_10152661727341525_7521948774711213017_n

முன்னாள் ஜனாதிபதி நேற்று ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கை ஒன்றிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தனது சகோதரர் பசில் ராஜபக்ச, நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் ஜனாதிபதி கூட்டத்தில் துப்பாக்கியுடன் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராணுவ அதிகாரி ஆகியோர் அப்பாவிகள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நான் இதற்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவிருந்த நேரத்தில் எனது சகோதரர் பசிலை கைது செய்தார்கள் இரண்டாவது முறை ஜொன்ஸ்டனை கைது செய்துள்ளார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கு அருகில் துப்பாக்கியுடன் இராணுவ அதிகாரி சென்றாதாக கூறப்படும் கதை முற்றிலும் பொய்யானதென அவர் கூறியுள்ளார்.

இச்சம்பவங்கள் அனைத்தும் அரசியல் பழிவாங்கல்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE