ஊவா மாகாண முதலமைச்சராக மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹரீன் பெர்னாண்டோ எதிர்வரும் 13ம் திகதி பதவியேற்கவுள்ளார்.
ஊவா மாகாண சபையின் புதிய அமர்வு எதிர்வரும் 13ம் திகதி முற்பகல் சபைத் தலைவர் ஏ.எம். புத்ததாச தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.
எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பதுளையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது ஊவா மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹரீன் பெர்னாண்டோவிற்கு ஊவா மாகாண முதலமைச்சர் பதவியை வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.
ஊவா மாகாண சபையின் ஆளும் கட்சி தரப்பிலிருந்து நான்கு உறுப்பினர்கள் சபையின் புதிய அமர்வின் போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளனர்.
இவ் இணைவுடன் தமக்கு பெரும்பான்மை பலத்தை ஊவா மாகாண ஆளுனரிடம் உறுதிப்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர் ஹரீன் பெர்னாண்டோ மாகாண முதலமைச்சராக பதவியேற்றார்.