நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு, நீரிழிவு நோய் பாதிப்பிலிருந்து தப்பிப்பதற்கு, உடல் எடை இழப்புக்கு என பல்வேறு வகையில் குடிபானங்கள் விற்பனை செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
கடந்த ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இருந்தே அமெரிக்க மக்கள் இவ்வகையான குடிபானங்களுக்கு அடிமையாகிவிட்டனர்.
தற்போது உலக நாடுகளில் உள்ள மக்கள் அனைவரும் இவ்வகையான பானங்களை அதிகம் விரும்பி குடிக்க ஆரம்பித்துவிட்டனர்.
இந்நிலையில் இதன் உண்மைத்தன்மை பற்றி தற்போது ஒரு ஆராய்ச்சி செய்யப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் குறித்த வகை குடிபானங்களை உள்ளெடுப்பது உடல் திணிவை வெகுவாக அதிகரிக்கச் செய்வதுடன், இருதய நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்களையும் அதிகரிக்கச் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டசின் கணக்கான ஆய்வுக்கட்டுரைகளை அலசி ஆராய்ந்த Manitoba பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான Meghan Azad என்பவர் இதனை தெரிவித்துள்ளார்.