எதிர்கட்சித் தலைவர் விடயத்தில் குழப்பநிலை

314
நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ்குணவர்தனவை எதிர்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்ட கடிதம் ஒன்று சபாநாயகருக்கு வழங்கப்பட்டுள்ளது.

54 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் கைச்சாத்திட்டுள்ளனர்.

விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டோரே இதற்கான நடவடிக்கையை எடுத்திருந்தனர்.

எதிர்கட்சித் தலைவர் யார் என்பதை இன்று நாடாளுமன்றத்தில் சபாநாயகர் ஷமல் ராஜபகஷ அறிவிக்கவுள்ளார்.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் எதிர்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த நிமால் சிறிபால டி சில்வா, அந்த கட்சி தேசிய அரசாங்கத்துடன் இணைந்த பின்னர் எதிர்கட்சித் தலைவராக தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனைஅடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே இந்த பதவி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

எனினும் இனவாத கட்சிகள் சில இணைந்து தினேஸ்குணவர்தனவை எதிர்கட்சித் தலைவராக நியமிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

எவ்வாறாயினும், சிறிலங்கா சுதந்திர கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஊடாகவே நாடாளுமன்றத்துக்கு தெரிவான நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் தற்போது அரசாங்கத்தின் ஒரு அங்கமாகவே கருதப்படுகிறது.

இந்த நிலையில் எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு இரா.சம்பந்தனே தகுதியானவர். எனினும் இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை இன்று சபாநாயகர் அறிவிக்கவுள்ளார். இந்த நிலையிலேயே குறித்த கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

SHARE