எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தம்முடைய இருப்புக்கு எதிராக சுமந்திரனின் தேர்தல் வெற்றி அமையும் என்ற அச்சமும் மேற்படி நாசவேலைக்கான முழுமையான காரணம்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்

337

 

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திரி என அழைக்கப்படுகின்ற கௌரவ.எம்.சுமந்திரன் (பா.உ) அவர்களது கொடும்பாவி இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஒரு கண்டனப்பேரணியில் எறியூட்டப்பட்டிருக்கின்றது. 
சர்வதேச அரங்கிலும், இலங்கையிலும் தமிழ் மக்கள் மத்தியில் வளர்ந்தும் வரும் சுமந்திரன் மீதான செல்வாக்கு, குறிப்பாக யாழ் மண்ணில் கற்றறிந்த தமிழ் மக்கள் மத்தியில் வளர்ந்துவரும் அங்கீகாரம் என்பவற்றை கண்டு எழுந்திருக்கின்ற பொறாமையும் ஆற்றாமையும், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தம்முடைய இருப்புக்கு எதிராக சுமந்திரனின் தேர்தல் வெற்றி அமையும் என்ற அச்சமும் மேற்படி நாசவேலைக்கான முழுமையான காரணம் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார். 


அதுமாத்திரமன்றி எப்படியாவது சுமந்திரனை தமிழ் மக்களின் துரோகி எனக் காட்டுவதும் இவர்களின் முழுமையான நோக்கமாகும். சர்வதேச விசாரணையினை யார் இலங்கைக்கு எதிராக அமெரிக்க அனுசரணையோடு ஐ.நா.மன்றில் முன்வைத்தது, அதனை வலுச்சேர்ப்பதற்கான முழுமையான பங்களிப்பை யார் வழங்கியது, மிக நுட்பமான முறையில் மேற்படி விசாரணையின் காய்நகர்த்தல்களை யார் மேற்கொண்டது என்பதை உலகமே அறியும்.
இந்நிலையில் சர்வதேச விசாரணையினை தாமே கொண்டு வந்ததாக மார்தட்டும் கஜேந்திரக் குமார் பொன்னம்பலம், சர்வதேச விசாரணை குறித்த கலந்துரையாடலில் தொடர்புடைய வெள்ளைக்காரியொருவரால் கை காட்டிப்பேசுவதை நிறுத்து என்று எச்சரிக்கப்பட்ட சுரேஷ் பிரேம சந்திரன்,(மண்டையன்) ஐ.நா மன்றின் வாசலில் நின்று யாரோடோ கதைத்துப்போட்டு; யாழ்ப்பாணத்தில காணமல் போன பிள்ளைகளின்ற அம்மாக்களிடம் தான் நேரடியாக இங்கிலீஸில பேசி பூசாவில இருக்கிற எங்கட பொடியல உடனடியாக விடுவிக்க கோரியதாக கூறித்திரியும் அனந்தி சசிதரன், டியூசன் போற பொம்பிள பிள்ளைகளிட்ட சேட்டைவிட்டு அடிவாங்கிய தருதலை வாத்தி கஜதீபன், மஹிந்தவின் கக்கூசுக்குள்ள குடியிருக்கும் சிவாஜி ஆகியோர் மேற்படி எறியூட்டலின்போது அருகில் இருந்தார்கள் என்பதை இங்கு சொல்லியாக வேண்டும்.
மக்கள் தீர்ப்புச் சொல்லும் நாளில் உண்மையானவர்களை மக்கள் உலகிற்கு எடுத்துச் சொல்வார்கள்.

SHARE