எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளாது -வைத்தியகலாநிதி சி.சிவமோகன்

185

 

எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளாது004

மாவட்ட ரீதியில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கும் இடையில் கடுமையான போட்டி நிலவும் என குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறெனினும் ஐக்கிய தேசியக் கட்சி ஓரளவு முன்னணியில் திகழ்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி மொத்தமாக 90 ஆசனங்களையும், தேசியப் பட்டியல் மூலம் 12 முதல் 14 வரையிலான ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 81 ஆசனங்களையும் தேசியப் பட்டியல் ஊடாக 10 முதல் 12 வரையிலான ஆசனங்களை பெற்றுக் கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜே.வி.பி 12 ஆசனங்களையும் தேசியப் பட்டியல் ஊடாக 2-3 ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளும் எனவம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 14 ஆசனங்களையும் தேசியப் பட்டியல் ஊடாக 2 முதல் 3 ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் தலா ஒன்பது மாவட்டங்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நான்கு மாவட்டங்களையும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெளிநாட்டு தூதரங்களினால் மேற்கொள்ளப்பட்ட விரிவான கருத்துக் கணிப்பின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 11 மாவட்டங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி 8 மாவட்டங்களிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 3 மாவட்டங்களிலும் வெற்றியீட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் போது 14 மாவட்டங்களில் கூட்டமைப்பு வெற்றியீட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் எந்தவொரு அரசியல் கட்சியும் 113 ஆசனங்களைப் பெற்றுத் தனித்து அரசாங்கமொன்றை அமைக்கக் கூடிய சாத்தியம் இருக்காது என்பதே அனைத்து கருத்துக் கணிப்புக்களினதும் தற்போதைய முடிவாக அமைந்துள்ளது.

SHARE