எந்திரன் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகர் தான்.. ரஜினி, கமல் கிடையாது

14

 

இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்ட படைப்புகளில் ஒன்று எந்திரன். தமிழ் சினிமா பெருமிதம் கொள்ளும் அளவிற்கு இப்படத்தை இயக்கியிருந்தார். மேலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் திரையில் சிட்டி ரோபோவாக காட்டிய விதம் அசத்தலாக.

சுருக்கமா இந்த படத்தோட கதைய பத்தி சொல்லனும்னா, ‘சனா-வ காதலிச்சோமா, கல்யாணம் பண்ணோமானு இல்லாம, 10 வருஷமா ராப்பகலா கஷ்ட்டப்பட்டு, ஒரு ரோபோ-வ கண்டுபிடிச்சு, அதுக்கு சிட்டி பெயர் வைச்சது மட்டும் இல்லாம அதுக்கு உணர்வுகளையும் கொடுக்க முயற்சி செய்கிறாரு வசீகரன். அதுக்கு அப்பறோம் சிட்டி சும்மா இருக்குமா?

சனா-வ நான் காதலிக்கிறேன் சொல்லி, வசீகரன் சனா கழுத்துல தாலி கற்ற நேரத்தில் கல்யாண மண்டபத்துக்குள்ள புகுந்து சனா-வ தூக்கிட்டு போயிருச்சு. இதுக்கு அப்பறோம் சிட்டியோட கோட்டைக்குள்ள போய் டாக்டர் வசீகரன் சனா-வ காப்பாத்துன விஷயம் நம்ம எல்லாருக்கும் தெரிஞ்சது தான்.

முதலில் நடிக்கவிருந்த ஹீரோ, ஹீரோயின்
ஹாலிவுட்டில் இருந்து மட்டுமே Sci-Fi திரைப்படங்கள் வந்துகொண்டிருந்த காலகட்டத்தில், தமிழ் சினிமாவிலும் அப்படியொரு படம் பண்ண முடியும் என காட்டினார் ஷங்கர். அதே போல் இன்று வரை ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் டாப் 5 திரைப்படங்கள் என லிஸ்ட் எடுத்தால் அதில் கண்டிப்பாக எந்திரன் திரைப்படமும் இடம்பெறும்.

ஆனால், எந்திரன் திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது ரஜினி கிடையாதாம். இப்படத்தின் கதையை முதன் முதலில் பாலிவுட் கிங் கான் நடிகர் ஷாருக்கான் இடம் தான் ஷங்கர் கூறியுள்ளாராம். ஷாருக்கானுக்கு கதை பிடித்துப்போக, இருவரும் இணைந்து படம் பண்ணலாம் என கூறியுள்ளார். இப்படத்தில் பிரியங்கா சோப்ராவை கதாநாயகியாகவும் கமிட் செய்துள்ளனர்.

அதன்பின் ஷங்கரின் வேலை செய்யும் விதம் ஷாருக்கானுக்கு பிடிக்கவில்லையாம். நிறுத்தி நிதானமாக படத்தை எடுப்பவர் ஷங்கர். ஆனால், ஷாருக்கானுக்கு விறுவிறுப்பாக படத்தை எடுத்துவிட வேண்டுமாம். இதனால் ஷங்கரின் எந்திரன் பட வாய்ப்பை வேண்டாம் என கூறிவிட்டாராம் ஷாருக்கான். இவர் வெளியேறியபின் பிரியங்கா சோப்ராவும் வெளியேறிவிட்டாராம்.

இதன்பின் கமல் ஹாசன் – ப்ரீத்தி சிண்டாவை வைத்து எந்திரன் படத்திற்காக போட்டோஷூட் எல்லாம் நடத்தினார் ஷங்கர். பின் இந்த ஜோடியும் படத்திலிருந்து விலகிவிட்டனர். இறுதியாக ரஜினிகாந்த் – ஐஸ்வர்யா ராய் இருவரையும் வைத்து எந்திரன் படத்தை எடுத்து முடித்துள்ளார். இப்படமும் வெளிவந்த உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE