எனக்கு எந்த பெண் துணையுமே தேவையில்லை – பிரபுதேவா.

470
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்றால் கண்டிப்பாக அது பிரபுதேவா தான். ஒரு காலத்தில் நடன இயக்குனராக கொடிகட்டிப் பறந்து, பின் இயக்குனராக அவதாரம் எடுத்து அதிலும் வெற்றி கண்டார்.

என்ன தான் தொழிலில் ஜாம்பவானாக இருந்தாலும் தன் சொந்த வாழ்க்கையில் பெண்கள் விஷயத்தில் மிகவும் அடிப்பட்டவர். தன் குழுவில் பணிபுரிந்த ரமலத்தை காதல் திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் பெற்ற பின்னும் அதை மறைத்தே வந்தார், பின் சில வருடங்களுக்குப் பிறகுதான் தனக்கு திருமணமானதையே தெரிவித்தார்.

இதை தொடர்ந்து நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் செய்வதாக இருந்தார், பின் அதுவும் கசந்து போக இருவரும் கல்யாணம் ஆகாமலேயே பிரிந்துவிட்டனர். தற்போது ஒரு பேட்டியில் பிரபுதேவா ‘பெண்கள் என்றாலே எனக்கு வெறுத்து போய்விட்டது, கடந்த சில வருடங்களாக தனிமையில்தான் வாழ்ந்து வருகிறேன், இனி எனது வாழ்க்கையில் எந்த பெண் துணையுமே தேவையில்லை’ என்று தெரிவித்துள்ளார்

SHARE