எனது கணவரை இன்னமும் வைத்திருக்கின்றது – மனைவி:- இராணுவத்தின் ஷெல் வீச்சில் இரத்த வெள்ளத்தில் உறைந்திருந்தது மாத்தளன் வைத்தியசாலை:-

446

Woman Mulli_CI84b-phoca_thumb_l_vanni12

நேவியே எனது கணவரை இன்னமும் வைத்திருக்கின்றது;மனைவி ஒருவர் உருக்கமாக சாட்சியம்
எனது கணவன் உயிரோடு தான் இருக்கின்றார். அவரை நேவி தான் வைச்சிருக்கிறது. யார் எங்களை சித்திரவதை செய்தாலும் யாருக்கும் பயப்படவில்லை. எனது கணவர் என்பது எனது உரிமை. எனது உரிமையினை யாராலும் கேட்க முடியாது என இன்று பெண்ணொருவர் சாட்சியமளித்தார்.

அவர் மேலும் சாட்சியமளிக்கையில்,

எனது கணவர் 18.03.2009 அன்று வலைஞர்மடம் கடலில் மீன்பிடிக்க சென்றபோது காலை 5.30 மணிக்கு கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்டார். எனினும் அவர் குறித்து இதுவரை தகவல் எவையும் கிடைக்கவில்லை.

எனினும் பத்திரிகைகள் ஊடாக எனது கணவர் கைது செய்யப்பட்டதை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உறுதிப்படுத்தியுள்ளதை அறிந்து கொண்டேன் .
அவருடன் மேலும் இருவர் போனவர்கள் எனினும் அவர்களை கடற்படை விடுவித்துவிட்டனர். இவர்களே என்னிடம் கணவர் கைது செய்யப்பட்டதை தெரிவித்தனர்.

எனக்கு 3 பிள்ளைகள் அதில் மூத்த மகனுக்கு தகப்பனை நினைத்து மனநோய் ஏற்பட்டுவிட்டது. எனினும் இன்னும் தகப்பனின் முடிவு பிள்ளைகளுக்கு கூறாது விட்டால் பிள்ளைகள் எல்லோரும் மனநோய் ஆகிவிடுவார்கள் .

எனது மூத்தபிள்ளைக்கு 13வயது இரண்டாவது பிள்ளைக்கு 10 வயது கடைசிப்பிள்ளைக்கு 6 வயது . நான்  சாப்பாடு செய்து கொடுத்து தான்  சீவிக்கிறம் .எனது கணவர் உயிருடன் இருக்கிறார் என்று நம்புகின்றேன்.

பிள்ளைகளும் நானும் தனிய தான் இருக்கின்றோம். எனக்கு யாரும் உதவிக்கு  இல்லை. காலை 6மணிக்கு போய் மாலை 6மணிக்கு வரும்வரையும்  எனது பிள்ளைகளுக்கு என்ன நடக்கின்றது என்று எனக்கு தெரியாது. அத்தோடு நான்  தொடர்ந்தும் பிள்ளைகளைக் கவனிங்காது இருந்தால் பாரிய பிரச்சினைகள் ஏற்படும்.

கடலுக்கு காலை 5.30 மணிக்கு போய்விட்டார். வலை போட்டுவிட்டு 8.30 மணிக்கு திரும்பவேண்டும் 18 ஆம் திகதி 8.30 மணி தாண்டியும் கணவர் வரவில்லை. இதற்குப் பின்னர் அவருடன் பிடிபட்டு விட்டவர்கள் கடற்படை கொண்டுபோவதாக தெரிவித்தனர்.

அத்துடன் கையை கட்டிவைத்துவிட்டு உடுப்பொன்றும் இல்லாமல் தான் கூட்டிக்கொண்டு போனார்களாம். புல்மேட்டையில் போய் கேட்டோம் அப்போது 45பேரை பிடித்து வைத்திருக்கின்றோம் ஆனால் விபரம்  வெளியிடவில்லை என்று கடற்படை கூறியது.

நேவி வைச்சிருக்கிறது எண்டு தான் நான்  நினைக்கிறன். என்கணவர் உயிருடனேயே இருக்கிறார். யார் எங்களை சித்திரவதை செய்தாலும் யாருக்கும் பயப்படவில்லை. எனது கணவர். இது எனது உரிமை. எனது உரிமையினை யாராலும் கேட்கேலாது. எனக்கு கணவரும் , பிள்ளைகளுக்கு அப்பாவும் என்ற உரிமை ஒரு தடவைதான் கிடைக்கும்.

எனவே இப்படி இருப்பதைவிட யாரும் கொண்டு போய் போட்டாலும் இனிமேல் எமக்கு பிரச்சினை இல்லை என ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார்.

மாத்தளன் வைத்தியசாலையில் இருந்த எனது கணவரை பார்க்க சென்ற போது இராணுவத்தினரின் ஷெல் வீச்சில் மாத்தளன் வைத்தியசாலை சேதமடைந்து இருந்ததுடன் இரத்த வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்து கிடந்தனர்.

அதற்குள்  எனது கணவரைக் காணவில்லை என பெண்ணொருவர் ஆணைக்குழுவிற்கு முன்னால் இன்று சாட்சியமளித்தார்.

காணாமற் போனவர்களைக் கண்டறியும் ஆணைக்குழுவின் விசாரணை இன்று முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்று வருகின்றது. அதில் மேற்கண்டவாறு சாட்சியமளித்தார்.

அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில்,

இராணுவத்தினரின் ஷெல் தாக்குதலில் எனது கணவர் காயமடைந்து மாத்தளன்  வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். முதல்  நாள்  அவரைப் பார்த்துவிட்டு வந்தோம் மறுநாள்  பார்க்கப் போகும்போது வைத்தியசாலை ஷெல் தாக்குதலால் முற்றாக சேதமடைந்து இருந்தது.

எங்கு பார்த்தாலும் இரத்த வெள்ளத்தில் இறந்தவர்களின் ஆயிரக் கணக்கான சடலங்கள் கிடந்தன. எல்லா இடமும் தேடிப்பார்த்தேன்  எனது கணவரைக் காணவில்லை . அதற்குப் பிறகு இன்று வரை எனது கணவர் குறித்து எதுவும் எனக்கு தெரியாது.

எனக்கு 8பிள்ளைகள் அதில்  5பிள்ளைகள் ஷெல் வீச்சில் இறந்துவிட்டனர். மற்றைய இரண்டு பிள்ளைகளும்  திருமணம் செய்து போய் விட்டனர். நானும் கடைசி பிள்ளையும் தான்  இப்போது இருக்கின்றோம்.

வருமானம் எதுகும் இல்லை. நான்  கூலி வேலைக்கும் வீடுகளுக்கு சென்று தூள் , மா இடித்துக் கொடுத்தும் அதில் வாற பணத்தை தான் கொண்டு தான் சீவிக்கின்றோம் என்றும் அவர் மேலும் சாட்சியமளித்தார்.
புது­மாத்­தளன் பகு­தியில் யுத்தம் இடம்­பெற்றுக்கொண்­டி­ருந்­த­ போது ஷெல் தாக்­கு­தலில் தனது 5 பிள்­ளைகள் கொல்­லப்­பட்­டுள்ள­தா­கவும், அதே தாக்கு­தலில் படு­கா­ய­ம­டைந்த கண­வரை மாத்­தளன் பாட­சா­லையில் இயங்கிய வைத்­தி­ய­சா­லையில் தவறவிட்­டதா­கவும் முல்­லைத்­தீவில் பெண்­ணொ­ரு­வர் நேற்று ஆணைக்­கு­ழுவின் முன்­னி­லையில் சாட்­சி­ய­மளித்தார்.

இதே­வேளை எங்க­ளுக்கு எது­வுமே வேண்டாம். எங்­க­ளு­டைய பிள்­ளை­களை மட்டும் திரும்ப எங்­க­ளிடம் ஒப்­ப­டை­யுங்கள் என ஆணைக்­கு­ழு­விடம் உருக்­க­மாக மன்­றா­டிய தாயார் ஒருவர் தாம் இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்த பின்னர் சுமார் 4 தினங்­க­ளாக சீரான குடிநீர் கிடைக்­காத நிலையில் உண­வுகள் எது­வு­மின்றி பசி­யுடன் வாடி­ய­தா­கவும் சாட்­சி­ய­ம­ளித்தார்.

கற்­றுக்­கொண்ட பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­க­ளுக்­க­மைய ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள காணாமல் போனோரைக் கண்­ட­றி­வ­தற்­கான ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணைகள் நேற்று முல்­லைத்­தீவு கரை­து­றைப்­பற்று பிர­தேச செய­லக மண்­ட­பத்தில் இடம்­பெற்­றது.

இந்த அமர்­வு­களில் சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்­காக நேற்­றைய தினம் 60 பேருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

நாம் கடந்த 2009 ஆம் ஆண்டு நாலாம் மாதம் புது­மாத்­தளன் பகு­தியில் வசித்­த­பொ­ழுது ஷெல் தாக்­கு­த­லுக்கு இலக்­காகி பாதிக்­கப்­பட்டோம். இந்த ஷெல் தாக்­கு­தலில் நான் எனது 5 பிள்­ளை­களைப் பறி­கொ­டுத்­துள்ளேன். இதே ஷெல் தாக்­கு­தலில் கண­வரும் படு­கா­ய­ம­டைந்தார். படு­கா­ய­ம­டைந்­த­வரை நாம் மாத்­தளன் பாட­சா­லையில் இயங்­கிய வைத்­தி­ய­சா­லைக்குக் கொண்டு சென்றோம். நாங்கள் செல்­கின்­ற­போது அந்த வைத்­தி­ய­சா­லையில் பிணக்­கு­வி­யல்­களும் இரத்­த­மு­மாக காணப்­பட்­டது.

இந்த நிலையில் நாம் படு­கா­ய­ம­டைந்த கண­வரை அங்கு ஷெல் தாக்­கு­தலின் அகோ­ரத்­தினால் கைவி­ட­வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. எனக்கு எட்டுப் பிள்­ளைகள் பிறந்­தார்கள். நான் ஐவரை ஒரே ஷெல்லில் பறி­கொ­டுத்­துள்ளேன். எனவே எனது கண­வரை என்­னிடம் மீண்டும் ஒப்­ப­டை­யுங்கள் என ஆணைக்­கு­ழுவின் முன்­னி­லையில் மன்­றாட்­ட­மாக தனது கோரிக்கை முன்­வைத்தார்.

நான் எனது மக­ளான ஜெய்­பி­ரியா என்­ப­வரை கடந்த 3.5.2009அன்று முள்­ளி­வாய்க்கால் பகு­தியில் தவ­ற­விட்­டுள்ளேன். இதேபோல் எனது மக­னையும் ஷெல் தாக்­கு­தலில் பறி­கொ­டுத்­துள்ளேன். எனக்கு எனது பிள்­ளை­களைத் தவிர எது­வுமே பெரி­தாகத் தெரி­ய­வில்லை. என்­னு­டைய பிள்­ளையை என்­னிடம் மீண்டும் ஒப்­ப­டை­யுங்கள் என்றார்.

கடந்த 8.4.2009 அன்று அம்­ப­ல­வன்­பொக்­கனைப் பகு­தியில் பிரி­யந்தன் என்ற எனது மகனை யுத்­தத்­தினால் தொலைத்­து­விட்டேன். அதன்­பின்னர் நாம் இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்தோம். இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்த அன்­றி­லி­ருந்து சுமார் நான்கு நாட்­க­ளாக எமக்கு உண­வுகள் கிடைக்­க­வில்லை. குடி­நீரும் கிடைக்­க­வில்லை. இதனால் நாம் மிகவும் பாதிப்­ப­டைந்­தி­ருந்தோம். எனக்கு எந்­த­வொரு உத­வியும் வேண்டாம். எனது பிள்­ளையைக் கண்டு பிடித்துக் கொடுங்கள் என்றார்.

எனது மனை­வி­யான விக்­னேஸ்­வரி முள்­ளி­வாய்க்கால் பகு­தியில் கடந்த 2009.5.14 அன்று குண்டுத் தாக்­கு­தலில் படு­கா­ய­ம­டைந்­தி­ருந்தார். அவரைக் காப்­பாற்றும் நோக்­குடன் நாங்கள் 2009.5.17 அன்று அவ­ரையும் தூக்கிக் கொண்டு வட்­டு­வாகல் பகு­தியை நோக்கி நடந்து சென்றோம். அப்­பொ­ழுது அங்கே இரா­ணு­வத்­தினர் எம்மை இடை மறித்­தனர். எனது மனை­வியை தாங்கள் வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் செல்­வ­தா­கவும் எம்மை பிரி­தொரு வாக­னத்தில் ஏறிச் செல்­லு­மாறும் இரா­ணுவம் எனக்குத் தெரி­வித்­தது. ஆனால் நான் எனது மனை­வி­யுடன் வைத்­தி­ய­சா­லைக்குச் செல்­வ­தற்கு முயற்­சித்தேன். அப்­பொ­ழுது இரா­ணு­வத்­தினர் எனக்கு தடியால் அடித்துத் துரத்­தினர்.
அன்­றி­லி­ருந்து எனது மனை­வியைக் காண­வில்லை. இவ்­வாறு பாதிக்­கப்­பட்­டுள்ள நான் தற்­பொ­ழுது மிகவும் பாதிப்­ப­டைந்­துள்ளேன். எனவே எனது மனை­வியை மீட்­டுத்­தா­ருங்கள் என்றார்.

இதேபோல் கொக்­குத்­தொ­டு­வாயைச் சேர்ந்த தாயார் ஒருவர் சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,

மகிந்தன் என்ற தனது மகன் விடு­தலைப் புலி­க­ளுடன் இணைந்து பணி­யாற்­றி­ய­தா­கவும் அவர்­களின் கட்­ட­ளைக்­க­மைய மண­லாறு பகு­தியில் வேவு நட­வ­டிக்­கை­க­ளுக்­காக தனது மகன் சென்­ற­தா­கவும் அவரை அன்­றி­லி­ருந்து காண­வில்லை எனவும் தெரி­வித்தார்.

தன்­னு­டைய மகன் உயி­ருடன் இருந்தால் அவரை மீட்டுத் தரு­மாறும் ஆணைக்­கு­ழு­விடம் கோரினார்.
இதே­வேளை நேற்றுச் சாட்­சி­ய­ம­ளித்­த­வர்­களில் பலர் தங்­க­ளு­டைய குழந்­தை­களை விடு­தலைப் புலி­களின் கட்­டுப்­பாட்டுப் பகு­தியில் வைத்து தொலைத்து விட்­ட­தாகத் தெரி­வித்­தனர்.

இவர்­களில் சிலர் விடு­தலைப் புலிகள் வீட்­டுக்­கொ­ரு­வரைப் போராட வேண்டும் என அழைத்­த­பொ­ழுது தாம் தமது பிள்­ளை­களை ஒப்­ப­டைத்­தா­கவும் தெரி­வித்­தனர். இவ்­வாறு உற­வுகள் தெரி­வித்த பொழுது ஆணைக்­கு­ழுவின் அதி­கா­ரிகள் விடு­தலைப் புலிகள் படைக்கு ஆட்­களைச் சேர்த்­த­பொ­ழுது பணம் ஏதா­வது வழங்­கி­னார்­களா என்ற வினா­வையும் எழுப்­பி­யி­ருந்­தனர்.

இவேளை தாயார் ஒருவர் தனது மகனை மீட்டுத் தரு­மாறு சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,

கடந்த 2009.03.15 ஆம் திகதி வலை­ஞர்­ம­டத்தில் இருந்த போது கடைக்கு போவ­தாக கூறி வீட்டை விட்டுச் சென்­றவர் பிறகு என்ன நடந்­தது என்று எனக்கு தெரி­யாது ஆனால் வீட்­டுக்கு திரும்பி வர­வில்லை. இறு­திக்­கட்டம் வரை மகன் வருவான் வருவான் என்று பார்த்து கொண்டு இருந்தேன்.

நாங்கள் இருந்த பகுதியில் நாலாபக்கத்தில் இருந்தும் ஷெல் விழுந்து கொண்டே இருந்து.மகனை பார்த்தும் மகன் வரவில்லை. கடைசியாக தான் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் சென்றேன். அப்போது எனக்கும் தலையில் காயம் ஏற்பட்டுவிட்டது.

இன்னும் எனது மகன் குறித்து எதுவும் தெரியாது. நான் தனிய இருப்பதால் அரசாங்க உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை.

SHARE