ஸ்ரீகாந்த் நடித்து, தயாரித்திருக்கும் படம் நம்பியார். சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
அவ்விழாவில் கலந்து கொண்டு சூர்யா பேசுகையில், ஸ்ரீகாந்திற்கும் எனக்கும் பெரிய பழக்கமில்லை. நெருங்கிய நட்பெல்லாம் இல்லை.
ஆனால் ஸ்ரீகாந்துக்கும் எனக்கும் வேறு ஒரு தொடர்பு உள்ளது. ஸ்ரீகாந்த் ஒரு பத்திரிக்கையில் பேட்டி அளித்திருந்தார்.
அவர் அப்பா சொன்னதாக கூறியிருந்தார். எந்த தொழில் செய்தாலும், அதில் நிறைவாக, சிறப்பாக செய்ய வேண்டும். செருப்பு தைக்கும் வேலையாக இருந்தாலும் அதில் நீ முழுமையாக, உண்மையாக உன்னை ஒப்படைத்து சிறப்பாக முதல் ஆளாக, நம்பர் ஒன்னாக வரவேண்டும்’ என்று கூறியதாக பேட்டியில் சொல்லியிருந்தார்.
அது எனக்கு பெரிய ஊக்கமும், தூண்டுதலும் கொடுத்தது. அதை அன்றே மனதில் வைத்துக் கொண்டேன். இன்றும் பெரிதும் ஊக்கம் தரும் வார்த்தைகள் அவை.
அந்த வகையில் ஸ்ரீகாந்தை என்னால் மறக்க முடியாது என்று சூர்யா கூறினார்.