ஜோர்டான் நாட்டு போர் விமானியின் பேட்டியை தங்களது பிரசாரப் பத்திரிகையில் ஐ.எஸ்.ஐ.எஸ் வெளியிட்டுள்ளனர்.ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான வான்வழித் தாக்குதலில் பிரான்ஸ், கனடா, பிரித்தானியா, ஜோர்டன், ஜேர்மனி ஆகிய சர்வதேச நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த 24ம் திகதி ஜோர்டான் போர் விமானி முவாத் அல்-காஸீஸ்பேவை(Mu’ath al-Kaseasbeh) சிறைப்பிடித்த ஐ.எஸ்.ஐ.எஸ், அவர பேட்டியளிப்பது போன்ற கட்டுரை ஒன்று தங்கள் அமைப்பின் பிரசாரப் பத்திரிகையின் இணையதளப் பதிப்பில் வெளியிட்டுள்ளனர். அதில் அல்-காஸீஸ்பே கூறியுள்ளதாவது, வடக்கு சிரியாவில், யூப்ரடீஸ்(Yuprates) நதியோரம் அமைந்துள்ள ரக்கா(Raqqa) நகரின் வான் பகுதியில் எனது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. விமானம் வெளியிடும் வெப்பத்தைக் கொண்டு, அதனைப் பின்தொடர்ந்து அழிக்கும் “ஹீட் சீக்கிங்’ (Hit seking) தொழில்நுட்பம் கொண்ட ஏவுகணை மூலம் எனது விமானம் தாக்கப்பட்டது. அப்போது உடனடியாக பாரசூட் மூலம் விமானத்தை விட்டு வெளியேறித் தரையிரங்கினேன். ஆனால் அந்த வேளையில் தான் இஸ்லாமிய தேச “வீரர்கள்” என்னை சிறைபிடித்தனர் என்றும் எப்போது வேண்டுமானாலும் அவர்கள் என்னை கொலை செய்வர் எனவும் உருக்கமாக பேட்டியளித்துள்ளார். ஐ.எஸ். ஐ.எஸ் ஜோர்டான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகக் கூறிக்கொள்வதை அமெரிக்க ராணுவ தலைமைக் கட்டுப்பாட்டகத்தின் தலைவர் ஜெனரல் லாய்ட் ஆஸ்டின்(Loyid aastin) மறுத்து வந்ததால் இச்செய்தியை தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே சிட்னி ஹொட்டல் தாக்குதலை அரங்கேற்றிய ஹரோன் மோனிசை(Haron Morris) பாராட்டியும் அந்தப் பத்திரிகையில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. |