எப்.ஐ.ஆர் பதிவுக்கு பதிலடி கொடுத்த லதா ரஜினிகாந்த்

143

கோச்சடையான் படம் விற்றது தொடர்பாக அபிர்சந்து என்பவர் நேற்று பெங்களூரில் லதா ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்தார்.

இது பற்றி இன்று லதா ரஜினிகாந்த் கூறுகையில் கோச்சடையான் உரிமை தொடர்பாக நான் யாருக்கும் எந்த வித உத்தரவாதமும் தரவில்லை, வீணாக ஏன் மீது பழி சுமத்துகின்றனர்.

கடந்த ஒரு ஆண்டு காலமாகவே அபிர்சந்தும் அவரது மனைவியும் எனக்கு பல நெருக்கடிகள் கொடுத்தனர். ஏற்கனவே 2012 ம் ஆண்டிலே என் மீது சவுதா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள், விசாரித்து பார்த்த போலீஸ் அந்த வழக்கு பொய்யானவை என்று கூறி அவர்களை எச்சரித்து அனுப்பினார்.

இது நாள் வரை நான் பொறுத்து இருந்தேன். மேலும் என் குடும்பத்துக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக செயல்படும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று லதா ரஜினிகாந்த் தெரவித்துள்ளார்.

SHARE