எமது கருத்தை அவர்கள் உள்வாங்கவில்லை. இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்அரசியல் அனுபவசாளி வடக்கு மாகாண சபையின் மன்னார் மாவட்ட உறுப்பினர் ஞா.குணசீலன்

449

 

தமிழ் மக்களின் தேசியம் நோக்கிய பயணத்தைத் தொடர, இத் தேர்தலைப் புறக்கணித்தல் அல்லது வாக்கினை செல்லுபடியற்றதாக்குதலே சிறந்தது. இதுகுறித்து நான் முதல் நடந்த கூட்டத்தில் கூட்டமைப்புத் தலைமைக்கு வலியுறுத்தினேன். வேறு சில உறுப்பினர்களும் வலியுறுத்தினர். ஆனால் எமது கருத்தை அவர்கள் உள்வாங்கவில்லை. இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார் வடக்கு மாகாண சபையின் மன்னார் மாவட்ட உறுப்பினர் ஞா.குணசீலன்.

கூட்டமைப்பு ஏற்கனவே எடுத்த தீர்மானத்தையே அறிவித்துள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். வவுனியாவில் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று திங்கட்கிழமை ஊடகவியலாளர்களைச் சந்தித்து அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நான் அங்கத்துவம் வகிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதென்று முடிவெடுத்துள்ளது. ஆனால் அந்த முடிவில் எனக்கு உடன்பாடில்லை. தனிப்பட்ட ரீதியில் இந்த தேர்தல் தொடர்பாக அமைதியாக இருப்பது என்றே முடிவெடுத்தேன். ஆனால் என்மேல் சேறு பூச எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். இதனால் எனது உண்மை நிலையை தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.

உண்மையில் இந்தத் தேர்தல் தொடர்பில் பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை கூறுகின்றனர். ஆனால் என்னைப் பொறுத்த வரை இந்த தேர்தலில் யார் வெற்றி பெற்றும் தமிழ் மக்களுக்கு நன்மை கிடைக்கப்போவதில்லை. தமிழ் மக்கள் தேசியம் நோக்கிப் பயணிப்பவர்கள். எனவே இந்த தேர்தலின்போது இரு சிங்கள ஆட்சியாளர்களையும் நாம் ஏற்கவில்லை என்பதை வெளிப்படுத்த வேண்டும்.- என்றார். கட்சிக்கு எதிராக செயற்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டால்,அதுகுறித்து உங்கள் நிலைப்பாடு என்ற என்று கோட்கப்பட்டதற்கு, கட்சி நடவடிக்கை எடுத்தால் அதனை மற்ற உறுப்பினர்கள் சிலரைப் போன்று எதிர்கொள்ள தயாராகவுள்ளேன். அரசியல் எனது தொழில் இல்லை. தேசியம் சொல்லி வென்றேன். அதற்காக எந்த சவாலையும் எதிர்கொள்வேன்.-

44

SHARE