எமி ஆவியாக நடிக்கிறார்….

399


ஞ்சானுக்குப் பிறகு சூர்யா வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ள மாஸ் படத்தில் நயன்தாரா, எமிஜாக்‌ஷன் என இரண்டு நாயகிகளுடன் நடிக்கிறார்.  திகில் நிறைந்த காமெடி படமாக வரவுள்ள இப்படத்தில் நயன்தாராவின் கேரக்டருக்கே அதிக முக்கியத்துவம் இருப்பது போல் கதை மாற்றப்பட்டுவிட்டதாகவும், இதனால் இப்படத்தில் நடிக்க கால்ஷீட் இல்லையென கூறி எமிஜாக்‌ஷன் விலகிவிட்டதாகவும் தகவல்கள் பரவ, மாஸ் படக்குழுவினரிடம் இது பற்றி கேட்டபோது மாஸ் படத்திலிருந்து எமிஜாக்‌ஷன் வெளியேறவில்லையென்றும் அவர் ஒப்புக்கொண்ட கேரக்டரில் அவர்தான் நடிக்கவுள்ளார் என்றும் , மேலும் தற்போது சென்னை வந்துள்ள எமிஜாக்‌ஷன் இப்படத்துக்கான ஃபோட்டோ ஷூட்டில் கலந்து கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி எமிஜாக்‌ஷனுக்கான காட்சிகள் பெரும்பாலும் வெளி நாடுகளிலேயே படமாக்கப்படுவதாகவும், இப்படத்தில் எமிஜாக்‌ஷன் அழகான ஆவியாக நடிக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE