எமி ஜாக்சனோடு இணையும் உலக அழகி லாரா தத்தா

657
பிரபல டான்ஸ் மாஸ்டரும், இயக்குனருமான பிரபுதேவா நேற்று முன் தினம் தனது பிறந்த நாளை மிகச்சிறப்பாக கொண்டாடினார். இந்நிலையில், பிரபுதேவா தனது பிறந்த நாளில் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.

கடந்த ஆண்டுவெளியான ஆக்சன் ஜாக்சன் படத்தை அடுத்து பிரபுதேவா இயக்கவுள்ள ‘சிங் இஸ் பிலிங்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வெள்ளி தொடங்கியுள்ளது. அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஜோடி சேரும் இந்த படத்தில் முன்னாள் உலக அழகி லாரா தத்தாவும் இணைந்துள்ளார்.

ப்ரிதம் சக்கரவர்த்தி இசையமைக்கும் இந்த படம், வரும் அக்டோபர் 2 ஆம் திகதி காந்தி ஜெயந்தி நாளில் வெளியாகுமென என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  இதனை, பிரபுதேவா தனது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியிட்டு உறுதி செய்துள்ளார்.

  pryanka chopra-3  Amy-Jackson-Wallpaper-540x405
SHARE