எம்.ஜி.ஆர். அறக்கட்டளை சார்பில் பரவை முனியம்மாவுக்கு கிடைத்த பேருதவி

169

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகை மற்றும் பாடகி பரவை முனியம்மா. இவர் சமீபகாலமாக உடல்நலக் குறைவால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இவரின் இந்த நிலையை அறிந்த நடிகர் விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற நட்சத்திரங்கள் இவருக்கு பண உதவிகள் செய்து வந்தனர்.

இந்நிலையில், நடிகை பரவை முனியம்மாவுக்கு எம்.ஜி.ஆர். அறக்கட்டளை சார்பில் ரூ.6 லட்சம் நிதியுதவியும், குடும்பச் செலவுகளுக்கென்று மாதந்தோறும் ரூ.6000 வழங்க ஆணையிட்டுள்ளார் முதலமைச்சர் ஜெயலலிதா.

மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பரவை முனியம்மாவின் மருத்துவ செலவுகளை எம்.ஜி.ஆர். அறக்கட்டளையே ஏற்கும் என்றும் அறிவித்துள்ளார்.

SHARE