எய்ட்ஸ் இருக்கா? 15 நிமிஷத்துல கண்டுபிடிக்கலாம் 

420

உயிர்க்கொல்லி நோய்களை 15 நிமிடத்தில் கண்டறியும் வகையில் புதிய ஆப் ஒன்று அறிமுகமாகியுள்ளது.

உலகம் முழுவதும் உயிர்க்கொல்லி நோயான எச்.ஐ.வி மற்றும் சிப்லிஸ் போன்ற நோய்களால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.

இந்த நோய்களை வெறும் 15 நிமிடங்களில் கண்டுபிடிக்கும் வகையில் புதிய ஆப் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைகழகத்தை சேர்ந்த உயிரி மருத்துவ விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தயாரித்துள்ள சிறிய வடிவிலான Dongle-யை, ஸ்மார்ட்போன் மற்றும் கம்ப்யூட்டரில் ஒரு டிவைசாக மாற்றிக் கொள்ளலாம்.

இந்த கருவியின் மேற்புறத்தில் கட்டை விரலை வைத்தவுடன், அது தானாகவே கட்டை விரலில் இருந்து ரத்த மாதிரியை எடுத்துக்கொள்ளும்.

பின்னர் ரத்த மாதிரியை பரிசோதித்து 15 நிமிடங்களில் நோய் இருக்கிறதா என்பதை உடனடியாக அளித்துவிடும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றி விடலாம்.

SHARE