சென்னையில் எறும்பு கடித்து பலியான 12 வயது சிறுவன்.

357
சென்னையில் எறும்பு கடித்து சிகிசைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொடுங்கையூரை சேர்ந்த மணிகண்டன், அமுலு தம்பதியர் நடைபாதையில் வசித்து வருகின்றனர்.இவர்களின் மகன் சுதாகரை (12) வளர்க்கவும், படிக்க வைக்கவும் வசதி இல்லாததால், ராயபுரத்தில் உள்ள தனியார் இல்லம் ஒன்றில் தங்க வைத்து தனியார் பள்ளியில் படிக்க வைத்துள்ளனர்.

5ம் வகுப்பு படித்து வந்த சுதாகர் கடந்த 10ம் திகதி குளித்துவிட்டு துண்டால் முகத்தை துடைத்தபோது, துண்டில் இருந்த கட்டெறும்பு சிறுவனின் கன்னம் மற்றும் கண்களில் கடித்துள்ளது.

சிறுவனுக்கு எறும்பு கடித்த இடங்களில் வீக்கம் ஏற்பட்டதால், இல்ல நிர்வாகிகள் உடனடியாக சிறுவனை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இந்நிலையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்துள்ளார்.

பின்னர் மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள், எறும்பு கடித்து யாராவது உயிரிழப்பார்களா? என்று உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து பொலிசார் வந்த நடத்திய பேச்சு வார்த்தையை அடுத்து, உடலை வாங்கிச் சென்றுள்ளனர்.

மருத்துவர்கள் கூறுகையில், எறும்பு கடித்ததாகத்தான் சிறுவன் அனுமதிக்கப்பட்டான் ஆனால் சிறுவனின் உடலில் பல இடங்கள் வீங்கிவிட்டன.

சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

மேலும், எறும்பு கடித்ததா அல்லது வேறு ஏதாவது பூச்சி கடித்ததா என்பதை அறிய சிறுவனின் உடலில் இருந்து தோல் மற்றும் சதைகளை பரிசோதனைக்கு அனுப்பி இருக்கிறோம் என்றும் அதன் முடிவு வந்தால்தான் எதுவும் சொல்ல முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

SHARE