எலும்புத்துண்டை மாறிமாறி கவ்விக் கொள்ளும் ரவுப் ஹக்கீம் தமிழ் தேசியக் கூட்டமைப்பையம், ஐக்கிய தேசியக் கட்சியையம் இணையுமாறு மு.கா. பகிரங்க அழைப்பு!

408

 

கிழக்கு மாகாண சபையில் புதிதாக ஆட்சியமைத்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து செயற்பட வருமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் பகிரங்க அழைப்பு விடுத்தார்.
தற்பொழுது அக்கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்று இணைந்து செயற்பட வருமாறும் அமைச்சர் அக்கட்சிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.
மத்திய அரசாங்கத்தின் புதிய வரவு செலவுத் திட்டத்தில் கூட்டாக இணைந்து செயற்பட்டது போன்று கிழக்கு மாகாணத்திலும் செயற்பட ஒன்றிணையுமாறும் அமைச்சர் மேலும் அக்கட்சிகளிடம் கேட்டுக் கொண்டார்.
இதேவேளை, கிழக்கு மாகா­ணத்தில் மக்கள் வழங்­கிய ஆணைக்கு முர­ணா­கவே முஸ்லிம் காங்­கிரஸ் ஆட்­சி­ய­மைத்­துள்­ளது. எனவே, மக்கள் ஆணைக்கு முர­ணாக அமைக்­கப்­பட்ட ஆட்­சியை இரண்டு வாரங்­க­ளுக்குக் கூடத் தொட­ர­விட மாட்டோம் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் தேசிய அமைப்­பா­ளரும் கிழக்கு மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மான தயா­க­மகே சவால் விடுத்தார்.
மஹிந்த ராஜபக்ச தலை­மை­யி­லான கடந்த அர­சாங்கம் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக செயற்­பட்ட போது மௌனி­யாக இருந்து கொண்டு மஹிந்த ராஜபக்ச வழங்­கிய சுக­போ­கங்­களை அனு­ப­வித்த முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு எதி­ராக வாக்­க­ளித்­தோ­ருடன் இணைந்து ஆட்­சி­ய­மைத்­தி­ருப்­பது துரோ­கத்­த­ன­மான ஒரு செயற்­பா­டாகும் எனவும் அவர் குற்றம் சாட்­டினார்.
கிழக்கு மாகா­ணத்தில் முஸ்லிம் காங்­கிரஸ் ஆட்­சி­ய­மைத்­தி­ருப்­பது குறித்து கருத்து தெரி­வித்­த­ போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

 

 

SHARE