எல்லப்பர் மருதங்குளம் கணேசா முன்பள்ளியில் நடைபெற்ற சிறார்களுக்கான விளையாட்டு விழாவில் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி. சிவமோகன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், முன்பள்ளிக்கு பான்ட் வாத்தியங்களையும் வழங்கி கௌரவித்திருந்தார்.

141
12.06.2015 அன்று  எல்லப்பர் மருதங்குளம் கணேசா முன்பள்ளியில் நடைபெற்ற சிறார்களுக்கான விளையாட்டு விழாவில் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி. சிவமோகன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் விளையாட்டுப் போட்டியில் பங்கு பற்றிய சிறார்களுக்குரிய பரிசில்களையும், கணேசா முன்பள்ளிக்கு பான்ட் வாத்தியங்களையும் வழங்கி கௌரவித்திருந்தார்.
33 3530 31 32 35 36
மேலும் மேற்படி விளையாட்டு விழாவிற்கு வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசா, சமளங்குளம் கிராமசேவையாளர் என். குபேந்திரன், கலாநிதி எஸ். சூரியகுமார் சிதம்பரபுரம் வைத்தியசாலை, முருகனூர் சாரதா வித்தியாலய அதிபர் பா. நேசராசா, சமளங்குளம் பொலிஸ் உத்தியோகத்தர் சிறில் ஜெயசிங்க, சமளங்குளம் முத்துமாரி அம்மன் ஆலய குருக்கள் சி. சண்முகநாதன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்
SHARE