ஏமனில் அல்கொய்தா தாக்குதலில் 33 பேர் பலி

400
அரபு நாடான ஏமனில் கடந்த மாதம் தலைநகர் சானாவை ஹவ்தி பிரிவினர் கைப்பற்றியதை அடுத்து தொடர்ந்து அங்கு வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளமிக்க இந்த நாட்டில் ஹவ்தி பிரிவினருக்கு எதிராக அல்கொய்தா அமைப்புடன் இணைந்த அன்சார் அல் ஷரியா என்ற அமைப்பினர் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று அங்கு அல் பெய்டா மாகாணத்தில் உள்ள ரத்தா நகரில் தற்கொலைபடை தீவிரவாதி வெடி குண்டுகள் நிரப்பிய காரில் சென்று உள்ளூர் அதிகாரி ஒருவரது வீட்டின் மீது மோதினார். அப்போது பலத்த சத்தத்துடன் குண்டுகள் வெடித்தன. அந்தப் பகுதியே புகை மண்டலமாக மாறியது. இந்த தாக்குதலில், 13 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

இதுகுறித்து அல்கொய்தா அமைப்பினர், ஹெய்தி அமைப்பின் தலைவர் வீட்டில் நடந்த கூட்டத்தை குறி வைத்து தாக்குதல் நடத்தியதாக கூறினர். மேலும், அங்கு அடுத்தடுத்து நடந்த தொடர் தாக்குதல்களில் 20 பேர் கொல்லப்பட்டனர். இதன்மூலம் ஒரேநாளில் நடந்த தாக்குதல்களில் அங்கு 33 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்கள் அனைத்தையும் அல் கொய்தா தீவிரவாதிகளே நடத்தி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

SHARE