ஏர் ஏசியா விமான கருப்பு பெட்டியில் அபாய மணி அடித்தது பதிவாகியுள்ளதாக இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த டிசம்பர் 28ம் திகதி இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 162 பயணிகளுடன் சென்ற QZ8501 விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அனைவரும் பலியாகியுள்ளனர்.
இதனையடுத்து நடந்த மீட்பு பணியில் இதுவரை விமான விபத்திலிருந்து 40க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கருப்பு பெட்டியினை மீட்ட அதிகாரிகள் விபத்து குறித்து அறிய அதை சோதனை செய்து வருவதில் பல தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து இந்தோனேஷிய அதிகாரிகள் கூறுகையில், விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகும் முன்பே விமானத்திலிருந்த அபாய மணி சத்தம் எழுப்பியுள்ளது என்றும் இந்த ஓசைகள் கருப்பு பெட்டியில் பதிவாகியுள்ளதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளனர். |