ஏர் ஏசியா விமானம் விபத்துக்குள்ளாகும் என்று முன்கூட்டியே தனது வலைப்பதிவில் எழுதிய நபர் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் ஏர் ஏசியா விமானத்தை ஒரு “கருப்புக் கரம்” குறி வைத்துள்ளதாக டிசம்பர் 15ம் திகதி தனது வலைப்பதிவில் எழுதியுள்ளார்.
இவர் வெளியிட்ட ஒரு போஸ்டில், ஏர் ஏசியாவை ஒரு நிழல் அமைப்பு(கருப்புக் கரம் என்று அதை இவர் குறிப்பிடுகிறார்) குறி வைத்துள்ளது என கூறியுள்ளார். மேலும், இதற்கு முன்பு பாதிப்புக்குள்ளான எம்.எச் 17 மற்றும் எம்.எச் 370 ஆகிய விமானங்களையும் கூட, இதே குழுதான் குறி வைத்துத் தாக்கியதாகவும் இவர் கூறியுள்ளார். எனவே ஏர் ஏசியாவில் செல்ல நினைக்கும் சீனர்கள் அதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் எம்.எச் 17 காணாமல் போனது போல நீங்களும் காணாமல் போய் விடுவீர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இவர் கருப்புக் கரம் என கூறுவது தீவிரவாத அமைப்பாயா? அல்லது ஏதாவது நாட்டையா? என்பது தெளிவாகவில்லை. இந்நிலையில் இவரது வலைப்பதிவு வாசங்கங்கள் குழப்பத்தை தருவதாய் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இவர் சீன உளவாளியாக இருக்கலாம் அல்லது ஹேக்கராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. |