ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ்: ஹென்ரி ரூபெல்வ் அரையிறுதிக்கு முன்னேற்றம்!

16

ஆண்களுக்கான ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் குழுநிலைப் போட்டியில், வெற்றிபெற்று ரஷ்யாவின் ஹென்ரி ரூபெல்வ் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், ரெட் பிரிவில் இடம்பெற்றுள்ள ரஷ்யாவின் ஹென்ரி ரூபெல்வ் மற்றும் கிரேக்கத்தின் ஸ்டெபீனோஸ் சிட்ஸிபாஸ் ஆகியோர் மோதினர்.

எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், ஹென்ரி ரூபெல்வ் 3-6,6-3, 6-2 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் இறுதியாக அரையிறுதி குழுவிற்கு ரஷ்யாவின் ஹென்ரி ரூபெல்வ் முன்னேறியுள்ளார்.

நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், ரஷ்யாவின் ஹென்ரி ரூபெல்வ், நோர்வேயின் காஸ்பர் ரூட்டை எதிர்கொள்ளவுள்ளார்.

SHARE